பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கைப் படையினர்?

ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு படையினராக பணிபுரிந்தவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு படையினராக 130 இலங்கையர்கள் பணியாற்றியிருக்கின்றனர். இவர்கள் ஹெய்டியில் பணிபுரிந்த போது, அங்குள்ள சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

12வயதுடைய சிறுமிகள் மற்றும் சிறுவர்களுடன் இலங்கையின் அமைதிக்காப்பாளர்கள் பாலியல் உறவுகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், விசாரணையாளர்களிடம் வழங்கிய தகவலில் சுமார் 50 அமைதிப்படையினர் தம்முடன் உறவுகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது தளபதி ஒருவர் 75 சதங்களை தமக்கு வழங்கினார்; என்றும் சிலவேளைகளில் தாம் இராணுவ கனரக வாகனத்தில் உறங்கியதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைதிக்காப்பு படையினர் எவரும் தண்டிக்கப்படவில்லை.

பதிலுக்கு குற்றம் சுமத்தப்பட்ட 130பேர்; 114 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர் என்று வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Allgemein