எம் உணர்வோடு கலந்திட்ட ஈழ தேசம்…

 

இலச்சிய நெருப்பில்
தீக்குளித்தோம்
இறந்தும் நாம்
தமிழ் வளர்த்தோம்…

ஈழத்தாயின்
விழி நீர் துடைக்க
விருப்புடனே நாம்
செருக்களம் நுழைந்தோம்
செங்குருதியிலும் நீராடினோம்…

வீசும் காற்றாக
பகையூரிலும் நுழைந்தோம்
பகை மீது வெடியாகி
விழிகளை மூடினோம்
விடுதலை கனவோடு…

போராடினாலும் வீழ்வோம்
போராடாமல் விட்டாலும்
வீழ்வோம்
நாம் போராடி வீழ்ந்தால்
எம் சந்ததியாவது
நிம்மதியாக வாழும்…

தமிழீழ கனவது
கனவாகி போகாது
காலத்தின் மாற்றத்தால்
கருவாகி உயிராகும்
எம் உணர்வோடு கலந்திட்ட
ஈழ தேசம்…

சிவா தமிழீழம்…!!

Allgemein