சிட்னி முருகன் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஆடை அணிகலன்களை ஆண்டவன் விரும்புவதில்லை!! அப்பாவிகள் மேல் சந்தேகப்படுவது தர்மமும் இல்லை!!
—————————————————————————
பாலும் தேனும் ஆறாக ஒடும் அவுஸ்திரேலியா நாட்டிலே வாழக்கிடைத்தது பாக்கியமே. அதிலும் சிட்னி முருகனுக்கு அருகில் இருப்பது மேலும் பாக்கியம். கடந்த சனிக்கிழமை சிட்னி முருகன் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மிகப்பெரிய சனக்கூட்டம் சகல வசதிகளும் செய்து கொடுத்திருந்தார்கள். எந்தக் குறையும் காண்பதற்கில்லை.

ஆனால் சில கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்ததாக கேள்வியுற்றோம். பல பெண்களின் தங்க நகைகள்(13 க்கு மேல் என சொல்லப்படுகிறது) களவாடப்பட்டதாக தெரியவுருகிறது. தகுதி பெற்ற காவலாளிகள் கடமையில் இருந்தார்கள், cctv கமராக்கள் இருக்கிறது. இருந்தும் களவாடப்பட்டு விட்டது. செல்வச் சிறப்பான சிட்னியிலேயே இப்படி என்றால் எங்கள் சொந்த நாட்டில் எப்படி இருக்கும்? ஆனால் அங்கே இதிலும் குறைவு போலத்தான் தெரிகிறது. அப்படி என்றால் எம்மக்கள் சிட்னியில் வறுமையாகவா வாழ்கிறார்கள்? அல்லது ஆடம்பரமாக இதைச் செய்கிறார்களா? சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
இப்படியும் கதைக்கிறார்கள்…….. இவ்வளவு பதுகாப்பு இருந்தும் எப்படி களவு போனது? தானாக களண்டு விழுந்ததா அல்லது வேண்டுமெண்டு பெருமைக்காக சொல்வதாகவும் சொல்கிறார்கள். ஓரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்தவர்கள் மேல் சந்தேகப்படுவதாக பேசிக் கொள்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. அவர்கள் கஸ்டப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று வேலைகள் செய்து நன்றாகவே சம்பாதிக்கிறார்கள். நிச்சயமாக இது அவர்களுக்கு சங்கடததைக் கொடுக்கும் ஆகையால் இதை நல்லமுறையில் ஆராய்ந்து முடிவெடுப்பது கோவில் நிர்வாகத்திற்கு நல்லதாய் அமையும்.

எதிர்காலங்களில் பெண்கள் கோவில் திருவிழாக்களில் ஆடம்பரத்தை குறைத்தால் கோவில் நிர்வாகத்திற்கும் சௌகரியம், காவலாளிகளுக்கு செலுத்தும் செலவு குறையும். இதற்காக risk எடுக்கத் தேவையும் இல்லை. ஆண்களும் பெண்கள் நின்று பக்கம் சந்தேகமில்லாமல் வழிபடலாம். கோவிலுக்கு வழிபட வருபவர்கள் மேல் சந்தேகம் கொள்ளத் தேவையுமில்லாமல் போகும்.
மாதர்குலம் இதை கடைப்பிடித்தால் ஆடம்பரச் செலவும் குறையும் சமுதாயம் ஆரோக்கியமானதாயும் இருக்கும். இதைச் செய்ய முயற்சியுங்கள். 2012 க்கு முன் இப்படி கேள்விப்படவேயில்லை அதன்பின்தான் இப்படி. என்ன காரணம்?

தற்கால தொழில்நுட்பத்தில் இதை கண்டு பிடிப்பது பெரிய விடயமல்ல. மேலோட்டமாக ஒரு குறிப்பிட்டவர்களை சந்தேகப்படுவதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்தும் சந்தேகங்களுக்கு இடம் கொடாமல் கோவில் நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். 5 வருடங்களாக இப்படியே போய்க்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல.

Allgemein