யேர்மனி டோட்முண்ட் நகரில்’உயிரணை‘ ‚நாங்கள்‘ வெளியீட் டுநிகழ்வுகள் இடம்பெற்றன.!

 

இன்று நடைபெற்ற அறிவியல்கலந்துரையாடலும் ‚நாங்கள்‘ சிற்றிதழ் வெளியீடும் ‚உயிரணை‘ நாவல் வெளியீடும்.

யேர்மனி டோட்முண்ட் நகரில் மேற்கூறிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அறிவியல் கலந்துரையாடலை நிகழ்த்திய திரு.ராஜ் சிவலிங்கம் அவர்கள் தனது ஆரம்ப உரையிலேயே இங்கு யாருமே தன்னைக் கண்டு கொள்ளவில்லை தமிழ் நாட்டில் தனது எழுத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள் என் கூறியதுமே, ஜேர்மனியில் உள்ள பத்திரிகையான வெற்றிமணியிலோ அலல்து அகரம்- தமிழ் ரைம் சஞ்சிகையிலோ எழுதாமல் எப்படி உங்கள் எழுத்தை அறிந்து கொள்ள முடியும் என தமது விசனத்தையும் விமர்சனத்தையும் முன் வைத்தார்கள்.

குறிப்பாக அவர் பிரபஞ்ச அடுக்குகள் பற்றியும் கோள்களில் உயிர்வாழும் உயிரினங்கள் பற்றியும் தான் வாசித்துப் பின் எழுதிய எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டார்

.

உலகை ஆட்டிப் படைக்கும் இலுமினேற்றர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.அங்கு வருகை தந்திருந்தவர்களில் பலர் பிரபஞ்சம் கோள்கள் பற்றித் தெரிந்து கொண்டவர்களாகவும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் மெஞ்ஞானத்தின் மூலம் அறிந்து ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும் சொன்னார்கள்.

நாளாந்தம் இணையத்தளங்கள் ஊடாகவும் முகநூல் வழியாகவும் பல சமூகத் தகவல்களையும் விஞ்ஞானம் தொடர்பான தகவல்களையும் அறிந்து வைத்துள்ள பலர் அக்கலந்துரையாடலில் இருந்தபடியால் அவர் கூறிய தகவல்கள் எதுவும் வியப்புக்குரியதாக இருக்கவில்லை.

அவர் நிகழ்த்திய விடயங்கள் தொடர்பாக தாம் அறிந்து கொண்ட விடயங்களையும் கலந்துரையாடியமை சுவையாக இருந்தது.

திரு.ராஜ் சிவலிங்கம் அவர்கள் தமிழ்நாட்டு எழுத்து ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெரிதாக நினைத்து ஜேர்மனியில் உள்ள எழுத்து ஊடகங்களை அலட்சியப்படுத்தினாரா அல்லது இவையெல்லாம் ஒரு ஊடகமாக என தாழ்வாக நினைத்தாரா என நினைக்கத் தோன்றுகின்றது.

ஏனெனில் ‚ஏன் நீங்கள் இங்குள்ள எழுத்து ஊடகங்களில் எழுதவில்லையென்று கேட்ட கேள்விக்கு அவரால் சரியான பதிலைச் சொல்லாமல் அதனைக் கடந்து போனதைக் கவனிக்க முடிந்தது.இது அவரிடமிருந்து சுப்பிரியோரிட்டிக் கொம்பிளக்ஸ் (Superiority Complex9என்று நினைப்பதைத் தவிர்க்க இயலாது.

கலந்துரையாடலை நிகழத்தும் ஒருவர் கேட்க வருவோரும் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆளுமை உள்ளவர்களாகவும் அவர் சொன்ன அதே அறிவியல் விடயத்தை எழுத்து ஊடகங்களில் எழுதிக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதையும் உணர்தல் வேண்டும்.

அவர் சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர இடைக்கிடை நிறுத்தி வருகை தந்தோருடன் கலந்குரையாட சந்தர்ப்பத்தை தரவில்லை. வருகை தந்தோர் இடைமறித்து தமது கருத்தைக் கூறும் சூழ்நிலையே அங்கிருந்தது.

இங்குள்ள எழுத்து ஊடகங்களைத் துச்சமாக மதித்து தமிழக எழுத்து ஊடகங்களை உயர்வாக நினைத்து அவர்களின் எழுத்து முறையை தமது சுயத்தை இழந்து தமதாக்கும் புலம்பெயர் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

தமிழக எழுத்துக்களை வாசித்து எம்மால் புரிந்து கொள்ள முடிகிறதெனில் , ஈழத்தமிழனுக்;கென்று ஒரு எழுத்து முறை இருக்கின்றது அதை தமிழக வாசகன் வாசித்து புரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணம் எமக்கு வேண்டும்.

அவர்களின் எழுத்து நடைக்குள் ஈழத்து எழுத்தாளன் ஏன் கரைந்து போக வேண்டும்?. ஒரு எழுத்தாளன் அங்கீகாரத்திற்காக எழுதுகிறான் என்றால் அது புகழுக்காக எழுதுகிறான் என்பதே அர்த்தம்.தனது எண்ணங்களை வாசிப்பவர்களுடன் கலந்துரையாட எழுதுபவனே எழுத்தாளன் ஆவான்.இதனை நண்பர் திரு.ராஜ் சிவலிங்கம் உட்பட இந்த இன்பிரியோரிட்டிக் (Inferiority Complex)கொம்பிளக்ஸ் உள்ள புலம்பெயர் எழுத்தாளர்கள் உணர்வார்களா?

அடுத்த நிகழ்வாக 2009 ஆண்டு போரின் வடுவை சுமந்து நிற்கும் தாற்பரியங்களைக் கொண்ட ‚உயிரணை‘ என்ற நாவல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.எழுத்தாளரும் கவிஞையுமான திருமதி.சாந்தி இந்நாவலை எழுதி இருந்தார்.

அடுத்து முகநூல்களில் வெளிவந்த ஆக்கங்களை உள்ளடக்கி நாங்கள் என்ற சிற்றிதழை திரு.வி.சபேசன் வெளியிட்டிருந்தார். இதன் ஆசிரியர் திரு.வி.சபேசன். பல ஆண்டுகளுக்கு முன் ஓபகவுசன் நகரிலிருந்து ஜேர்மன் தமிழ் மொழிகளில் ஒரே சஞ்சிகையாக வெளிவந்த சிற்றிதழின் தொடர்ச்சியான இரண்டாவது இதழே இது.

கவிஞர், எழுத்தாளர்,ஆய்வாளர் கந்தையா முருகதாஸ்

Merken

Allgemein