தமிழீழ தேசியத்தலைவர்மக்களையும் சர்வதேச உடகவியலாளர்களையும் சந்தித்தநாள் இன்று.!

தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் நேரில் மக்களை சந்தித்து நிகழ்த்திய சர்வதேச உடகவியலாளர்கள் மாநாடு நடைபெற்ற நாள் இன்று ஆகும்.

இன்றைய நாளின் நினைவலை சிறப்புகள் பற்றி நினைத்து பார்க்கும் பொழுது கிளிநொச்சியில் 10.04.2002 அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் நேரில் மக்களை சந்தித்து நிகழ்த்திய சர்வதேச உடகவியலாளர்கள் மாநாடு நடைபெற்ற நாள் இன்று ஆகும்.

அன்றைய நாளில் அந்நிகழ்வில் 700 -ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பல தேசங்களில் இருந்தும் வருகை தந்து கலந்து கொண்டதோடு தேசிய தலைவர் அவர்களும், அன்டன் பாலசிங்கம் அவர்களும் நேரில் சுமார் இரண்டரை மணி நேரம் அனைத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் விடை கூறி மிக நேர்த்தியாக இம் மாநாட்டை நடத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்வில் எழுப்பப்பட்ட பலதரப்பட்ட கேள்விகளூக்கும் அவர்கள் இருவரும் மிக சிறப்பாக பதில்களை வழங்கியிருந்ததுடன்
சமாதான முயற்சிகள் பற்றியும் ஊடகவியலாளர் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்தார்கள்.

 

Allgemein