தோழனே உன் முகம் காண
ஏங்குது என் விழியே
விடுதலை இலட்ச்சியத்திற்காய்
ஒன்றாக பயணித்தோம்
பல சோகங்கள் நீ சுமந்தாய்
பகைவர் உன் உறவுகள்
உயிரை பறிக்கவே
தலைவனின் சேனையில்
புலியென நீ நடந்தாய் தோழனே..
எதிரியவன் உயிரெடுக்க
போர்க்களத்திலே நீ
சமராடும் போது கூட
உறவுகளை நினைத்து
தோழனே நீயும் கண்ணீர் சிந்தினாய்..
சமராடும் போதினிலே
எதிரியவன் எறிகணையில்
உன் உயிர் பிரிந்தாய் தோழனே
களம் மீண்டு உன் வெற்றுடலை
நாம் சுமந்தோம் தோழனே..
சந்தன பேழையிலே
உன் உடல் வைத்து
விழிகளில் நீரோடு மண்ணிலே
உன்னை விதைத்தோம்
விதையாகவே..
இன்று தேடுகின்றேன் தோழனே
உன் கல்லறை காணாமல்
நீ சுமந்த விடுதலை கனவை
இன்றும் என் நெஞ்சோடு
சுமக்கின்றேன் தோழனே..
காலம் எங்களை
கரை ஒதுக்கினாலும்
எங்கள் விடுதலை கனவை
நங்கள் மறந்திடவில்லை தோழனே…
சிவா தமிழீழம்…..!!