மீண்டும்

 

விதைகள் உறங்காது – எம்
வீரம் அழியாது
பாதைகள் மாறாது – எம்
பயணங்கள் முடியாது,

ஆயிரமாயிரம் விதைகளை
தாங்கிய மண்ணில் ”
தாகங்கள் தீராது தலைவன்
எண்ணங்களும் மாறாது ”

கார்த்திகைப்பூ சிரித்திட
கரிகாலன் ஆட்சியும்,
காணங்கள் இசைத்திட
கல்லறைகளும் மூச்சுவிடும் ”

எங்கள் ஈழமே எம் மூச்சு
இதயமே எம் தலைவன் என்றாச்சு
மாற்றுப் பேச்சு எதற்கு
மானத் தமிழன் என்றாச்சு ”

விடியல் நாளை என்றாச்சு
வீரத்தமிழனே நீயாச்சு,
ஈழம் எங்கள் மூச்சு
இதுவே எங்கள் பேச்சு ”

ஈழவன் தாசன்

Allgemein