துணைவேந்தராக ஸ்ரீசற்குணராஜா!

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந் நியமனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் கடிதம் ஜனாதிபதி செயலகத்தால் யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் கடிதப் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய நிலையில், அது தொடர்பிலான தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிட ப்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தலில் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா 17 வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு தெரி வாகியிருந்தார்.
இவருடன் அடுத்த நிலை வாக்குகளைப் பெற்ற இருவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் ஒருவரே துணைவேந்தராக நியமனம் பெறுவார் என்ற நிலையில் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளி யாகியுள்ளன.
Allgemein