கண்டி உன்னஸ்கிரிய நகரில் ஹெயார் பார்க் தோட்ட மக்களின் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டமாக மீண்டும் தொடர்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், தோட்ட நிர்வாகம் 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடை இடையே பாதையை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்ற போது தோட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.