இ-மெயிலை கண்டுபிடித்த தமிழர் அமெரிக்க தேர்தலில் போட்டி

வாஷிங்டன்: இ-மெயிலை கண்டுபிடித்த அமெரிக்க வாழ் தமிழரான சிவா ஐயாத்துரை, அமெரிக்க பார்லி., தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையின் சில இடங்களுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் இ-மெயிலை கண்டுபிடித்த அமெரிக்க வாழ் தமிழர் சிவா ஐயாத்துரை, மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் சைட்டோசால்வ் எனும் நிறுவனத்தின் தலைவராகவும், சி.இ.ஓ.,வாகவும் இவர் உள்ளார்.

Allgemein