அவமானத்துக்கு உரிய தேசியக் கொடிகளின் பட்டியலில் இலங்கையின் தேசியக் கொடி இணைப்பு

 

அவமானத்துக்கு உரிய தேசியக் கொடிகளின் பட்டியலில் இலங்கையின் தேசியக் கொடி இணைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் சரக்கு பரிமாற்ற சம்மேளனம் இலங்கையை இந்த பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 34 நாடுகள் உள்ளதாகவும், அதில் இலங்கையைத் தவிர ஏனைய நாடுகள் மிகவும் வறிய சிறிய தீவுகள் என்று கூறப்படுகிறது.

செல்வந்த கப்பல் உரிமையாளர்கள் பிற நாடுகளின் தேசிய கொடிகளை வாடகைக்கு பெற்று கப்பல் பயணத்தை இலகுப்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு 30 வருடங்களாக இலங்கையின் தேசியக் கொடி வாடகைக்கு விடப்பட்டு, பணம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அவமானத்துக்கு உரிய தேசியக் கொடிகளின் பட்டியலில் இலங்கையின் தேசியக் கொடி இணைக்கப்பட்டுள்ளது.

Allgemein