‘படகுகளை விடுவிக்க தீர்மானிக்கவில்லை’

 

“இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை” எனக் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

“இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை” என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“2015 ஆண்டுக்குப் பின்னர் கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் படகுகள் விடுவிக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், அன்றைய அரசாங்கத்தால் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது” என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்திய மீனவர்களின் 130க்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழக அரசியல்வாதிகளால், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein