முல்லைத்தீவு வட்டுவாகல் பாடசாலை இவ்வாண்டு நூற்றாண்டு விழா காண்கின்றது..

„எங்கள் பள்ளிக்கு நூற்றாண்டு
இனியும் வாழ்ந்திடும் பல்லாண்டு“

இலங்கை அன்னியர் ஆட்சிக்காலத்தில் சைவ தமிழ் பாடசாலையாக முல்லைத்தீவில் வட்டுவாகல் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை இன்று பல வசதி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பல அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருப்பதை காணமுடிகிறது. வட்டுவாகல் பூர்வீக குடிகளுக்கு மத்தியில் இருந்த பாடசாலை பல புறநிலை காரணங்களால் மக்கள் புதிய குடியேற்றங்களை மையப்படுத்தி பாடசாலையும் குடியேற்ற மத்திய பகுதியில் சில உள்ளங்களால் (பதில் காணியை ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்ததை அடுத்து பாடசாலை புதிய இடத்திற்கு இடம்மாறியது. 12 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அவர்களுக்கு காணி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) வழங்கப்பட்ட காணியில் பாடசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் ஒன்றுகூடல் மண்டபம் இல்லாத நிலையில் பாடசாலை இயங்குவதை அவதானிக்க முடிகிறது. பாடசாலையில் இருந்து பார்த்தால் இந்துமயானம் தெரிகிறது. அங்கு நடக்கும் நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. இந்து மயானத்தை புதிய இடத்தை தெரிவு செய்வது சிறப்பான விடயமாக கருத இடமுண்டு. இப்போது இருக்கின்ற இந்துமயானத்தை புனித பிரதேசமாக அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டு முந்தைய இறந்தவர்கள் நினைவிடமாக அறிவிப்பதும் சிறப்பாக கருத இடமுண்டு. தற்காலிகமாக பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மரண இறுதி நிகழ்வை செய்வது உடன் நிவாரணமாக இருக்கலாம்.

மாணவர்களுக்கான ஒன்றுகூடல் மண்டபம் இல்லாது மிதி வண்டி நிறுத்துமிடத்தில் நிகழ்வுகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

புலத்தில் வாழ்கின்ற அனைத்து உறவுகளும் நிலத்தில் வாழ்கின்ற உறவுகளும் இணைந்து எங்கள் ஊர் மாணவர்களுக்கான கல்வியை ஊக்குவிக்கும் செயற்பாடாக அனைவராலும் செய்யக்கூடிய பங்களிப்புகளை செய்யுங்கள். இவ்வாண்டு நூற்றாண்டு விழா காணும் எங்கள் பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் என்ற கிராமத்தில் நூற்றாண்டுகளாய் தன் குழந்தைகளுக்கு மழலை மொழி பேசி „அ“ என்ற முதல் எழுத்தை தொடக்கி அறிவூட்டிய எங்கள் பாடசாலை. அனைவரும் ஒன்றுகூடி எங்கள் பாடசாலை நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்.
ஆக்கம்: கல்லூரான்

Allgemein