தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 52 பேர் 9 A : யாழ் வேம்படி மாணவிகள் சாதனை..!

 

யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப் பாடசாலை மாணவிகள் 52 பேர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர்.

இதில் 34 மாணவிகள் தமிழ் மொழி மூலமும் 18 மாணவிகள் ஆங்கில மொழி மூலமும் சித்தியடைந்துள்ளனர்.

மேலும் 56 மாணவிகள் 8 பாடங்களில் A சித்தியையும் 30 மாணவிகள் 7 பாடங்களில் A சித்திகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன், யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein