லண்டனில் இருந்து நியூயோர்க் பயணிக்க 3 மணி நேரம் மட்டுமே..!

லண்டன் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில், அதிவேக விமானம் ஒன்று தயாரிக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

„பேபி பூம்“ என பெயரிடப்பட்டுள்ள குறித்த விமானத்தை அமெரிக்காவின் வெர்ஜின் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தயாரிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த விமானத்தின் என்ஜினீயரிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விமானம், மணிக்கு 2,335 கி.மீ வேகத்தில் பயணிக்க கூடியது எனவும், ஏனைய அதிவேக விமானங்களை பார்க்கிலும் 10 வீதம் கூடுதல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த விமானத்தில் லண்டன் நகரில் இருந்து நியூயோர்க் நகருக்கு 3 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, குறித்த விமானத்தில் சோதனைகள் முடிந்து 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein