மஹிந்த ராஜபக்ஷவே சர்வதேசத்திடம் நாட்டைக் காட்டிக் கொடுத்தார்: சரத் பொன்சேகா

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டை சர்வதேச சிக்கலுக்குள் மாட்டிவிட்டு காட்டிக் கொடுத்தவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, “இறுதி மோதல்கள் முடிவுற்று இரு வாரங்களுக்குள் ஐக்கிய நாடுகளின் அப்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனை நாட்டுக்கு அழைத்து வந்து, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அதன்மூலமே நாடு சர்வதேசத்திடம் சிக்கிக் கொண்டது. நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷவே. அப்படியிருக்க அவர் இப்போது முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையானது.” என்றுள்ளார்.

Allgemein